ஓம் ஹம் கணபதயே நமக
கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் ஆறுகள் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் விளங்கும் புகழ் வாய்ந்த அம்மன் கோயில்களுள் ஒன்றாகும். இது விளவங்கோடு வட்டத்தில் தென்மேற்கு மார்த்தாண்டத்திற்கு 9.கி.மி தொலைவில் மார்த்தாண்டம், தேங்காய்பட்டணம் நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட சாலையோரத்தில் பைங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிறப்பு யாதெனில் ஆலமரத்தால் சூழப்பட்டு இயற்கை எழிலுடன் காணப்படுவது ஆகும். இவ்வாலயத்தில் பெண் தேவைதாயன ஸ்ரீ பத்ரேஸ்வரி கொலுவீற்றிருந்து அருளாட்சிச் செய்கின்றாள். இந்த தேவஸ்தானம் ஐநூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும்.
மேலும் வாசிக்க..வழிபாட்டு நேரம்
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி
திருநடை திறப்பு
காலை 10 மணி
திருநடை அடைத்தல்
(திங்கள்,புதன்,வியாழன்,சனி)
காலை 11 மணி
திருநடை அடைத்தல்
(ஞாயிறு.செவ்வாய்,வெள்ளி)
மாலை 5 மணி
திருநடை திறப்பு
இரவு 8 மணி
திருநடை அடைத்தல்