திருவிழா 10 நாட்கள்
நேர்ச்சைகள் (நேர்த்திக்கடன்)
- பால்குடம்
- வாழைக்குலை நேர்ச்கை
- குத்தியோட்டம்
- பிடிப்பணம்
- பூமாலை
- காவடி
- ஆறாட்டு
வாழைக்குலை நேர்ச்சை (Plantain Bunches)
வாழைக்குலை நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள் ஆலய மண்டபத் தூண்களில் வாழைக் செய்திருப்பார். இவ்வாறு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழைக்குலைகள் கட்டப்படும். இவ்வாழைக்குலைகளில் உள்ளப் பழங்கள் பக்தர்களுக்கு 10 நாள் திருவிழா இறுதியில் பிரசாதமாக வழங்கப்படும்.
பால்குடம் (Palkudam)
அம்மனுக்கு பால்குடம் நேர்ச்சைச் செய்யும் பக்தர்கள் 41 நாள் விரதமிருந்து அம்மன் கோயில் சாந்திக்காரர் வாயிலாக மாலை அணிந்து 9 ஆம் திருவிழா அன்று பால்குடம் எடுப்பார். _ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற நேர்ச்சை இது எனலாம். பால்குட அணிந்து மார்த்தாண்டம் நல்லு}ர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலிருந்து சாpயாக காலை 6.30 மணியளவில் தொடங்கி மார்த்தாண்டம் - வெட்டுவெந்நி – குன்னத்தூர்- முஞ்சிறை – புதுக்கடை வழியாக முத்துக்குடை – கீதா உபதேசரதம், ஐப்பரதம் - பத்ரேஸ்வாp அம்மன் ரதம் ஆகியவை உடன் செண்டை மேளதாளங்கள் அணிவகுப்புடன் கூட்டாலுமூட்டை வந்தடையும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுப்பர்.
குத்தியோட்டம் (Kuthiyottam)
அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மனுக்கு உடல்நிலை சரியில்லாதோர் குத்தியோட்டம் நேர்ச்சையை நேர்த்திக்கம் ஆகச் செய்வர். உயிர்காத்த அம்மனுக்கு 41 நாள் விரதமிருந்து உடலின் பின் பகுதியில் திரிசூலம் குத்தி 12 வயதிற்குட்ட ஆண்கள் (சிறுவர்கள்) குத்தியோட்ட நேர்த்திக்கடன் முடிப்பர். சு{லத்தின் இருபக்கங்களிலும் எலுமிச்சம் பழங்கள் செருகப்பட்டு இருக்கும். நேர்த்திக்கடன் முடியும் நேரம் திரிசூலம் குத்திய சாந்திக்காரர் கோயில் சன்னதி வளாகத்தில் வைத்தே உருவி எடுத்த பின் திருநீறு பூசி விடுவர். திருநீறு பூசியபின் காயங்கள் தெரிவதில்லை. திரிசூலம் காலடிகளில் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படும்
பிடிப்பணம் (Pidipanam)
பிடி கைப்பிடி, பணம் - காசு (சில்லறை) இந்நேர்ச்சை நோய், பிசாசு தொந்தரவுகளில் இருந்து தங்களை விடுவித்த அம்மனுக்கு நேர்ச்சை வேண்டிக்கிட்டுச் செய்வது ஆகும். இது 41 விரதம் இருந்து 9-வது திருவிழா அன்று விடுதலை – சுகம் (மூன்று பிடிப்பணம்) நேர்த்திக்கடன் செலுத்துவது ஆகும்.
பூமாலை (Poomalai) (7 நாள் விரதம்)
இது 12 வயதிற்குட்பட்ட பெண்கள் (சிறுமிகள்) மட்டும் செய்யும் நேர்ச்சை வழிபாடு ஆகும். இதுவும் 9-வது திருநாள் செய்வர். ஒரு தட்டு நிறைய மலர்கள் நிரப்பி அத்தட்டை ஏற்று கோயிலை மூன்று முறை வலம் வந்து தனக்கு தோன்றி ஆரோக்கியம் தந்த அன்னைக்கு நன்றி தொpவித்து நேர்த்திக்கடன் முடிப்பர்.
காவடி (Kavadi) (7 நாள் விரதம்)
7 நாள் விரதமிருந்து 9-வது திருவிழா காவடி எடுப்பர். காவடி பலவகைப்படும். மலர்களாய் பிறக்கும் காவடி என பல்வேறு வகைக் காவடிகள் எடுக்கப்படும் காவடியை விரதமிருந்த ஆண்கள் தமது தோளில் சுமந்து வந்து அம்மன் ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து முடிப்பர்.
ஆராட்டு (Arattu)
ஆராட்டு எனும் இந்நிகழ்ச்சி ‘அம்மன் கடலில் நீராடுதல்’ ஆகும். இக்கோயிலில் பிரதான நிகழ்ச்சிஅ ம்மன் ஆராட்டு ஆகும் இதில் அருள்மிகு கணபதி, அருள் மிகு, அருள் மிகு அம்மன், அருள்மிகு இசக்கி அம்மன், அருள்மிகு துர்க்கை அம்மன், அருள்மிகு கிருஷ்ணசாமி, அருள்மிகு அய்யப்ப சுவாமி, அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு நாகராஜா ஆகிய அனைத்து தேவதைகளும் தேங்காப்பட்டணம் (அரபிக்கடல்) கடலில் நீராடுவதற்கான மாலை 5 மணிக்கு மேல் 10-வது திருவிழா அன்று செய்வது வழக்கம். யானை மீது அணிவகுப்பாய் கொண்டு செல்லப்பட்டு சாந்திக்காரர் (பூசாரி) (6 மணிக்கு), கடலில் மூழ்கி நீராட்டுவார். பின்னர் சப்ரத்தில் பூஜை வைத்து மீண்டும் கோயிலுக்கு திரும்புவது வழக்கம். ஆராட்டு அணிவகுப்பு தீவட்டி, யானை அணிவகுப்புடன் ஊர்வலமாகச் சென்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.