ஓம் ஹம் கணபதயே நமக
கூட்டாலுமூடு
அருள் மிகு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம

அமைவிடம்

கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் ஆறுகள் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் விளங்கும் புகழ் வாய்ந்த அம்மன் கோயில்களுள் ஒன்றாகும். இது விளவங்கோடு வட்டத்தில் தென்மேற்கு மார்த்தாண்டத்திற்கு 9.கி.மி தொலைவில் மார்த்தாண்டம், தேங்காய்பட்டணம் நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட சாலையோரத்தில் பைங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிறப்பு யாதெனில் ஆலமரத்தால் சூழப்பட்டு இயற்கை எழிலுடன் காணப்படுவது ஆகும். இவ்வாலயத்தில் பெண் தேவைதாயன ஸ்ரீ பத்ரேஸ்வரி கொலுவீற்றிருந்து அருளாட்சிச் செய்கின்றாள். இந்த தேவஸ்தானம் ஐநூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும்.

கூட்டாலுமூடு பெயர்க்காரணம்

‘வயோதிகம் வந்தகால் தந்தையைத்தனயன் தாங்குவது போல்’ ஆலமரம் தன் விழுதுகளால் தாங்கப்பட்டு செழுமையுடன் வளர்கிறது. இங்கு ஒரே ஆல மரத்தின் விழுதுகள் பல கூடி கூட்டாலுமூடாய் ஆனது விந்தையே* ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் இக் கூட்டாலுமூட்டின் நிழலில் கொலுவீற்றிருப்பது இவ்வாலயச் சிறப்பு ஆகும்.

தல வராறு

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு 3 செம்பன் என்பவரின் மகளுக்கு மகளுக்கு மகப்பேறு இல்லாமல் இருந்ததால் செம்பனும் அவரது மகளும், மகளின் கணவருமாக வைங்குளம் வழுத மடத்திலுள்ள சிவயோகி என்னும் ஜோதிடரிடம் ஜோதிடம் கேட்டனர் ஜோதிடரும் அவர்களிடம் கூட்டங்குழி விளையின் வடக்குப் பகுதி பூவரச மரம் ஒன்று நிற்பதாகவும், அதன் கிளையில் காணப்படும் பொந்தில் ஆலமர தை நிற்பதாகவும் அம்மரத்தின் அடியில் பீடம் அமைந்து அம்மனை வழிபட்டால் மகப்பேறு கிடைக்குமெனவும் அருளினார். அதன்படியே செம்பனும் பீடமமைத்து பத்தி சிரத்தையுடன் வழிபட்டதன் விளைவால் மகப்பேறு கிடைக்கப்பெற்றனர். இச்செய்தி அவர்கள் வாயிலாக அறியப்பெற்ற மக்கள் பலரும் அம்மனை வழிபடத் தொடங்கினர். சிவயோகியே பூசைகள் செய்தார். இன்றும் அவர் பூஜை செய்வதாய் ஐதீகம் அதனாலேயே அவருக்கு தனிப்பீடம் ஆலயத்தில் காணப்படுகிறது. செம்பன் வசித்த அப்பகுதி ‘செம்பன் கோடு’ என நாமம் பெற்றது. இது தேவஸ்தானத்திற்கு 500 மீ தென் மேற்கில் உள்ளது.

செம்பன் காலத்திற்குப் பின் அந்த அம்மன் பீடத்தில் மக்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். பல வருடங்களுக்கு பிறகு பீடத்தைச் சுற்றி சிறுகோயில் எழுப்பினர். அதன் பின் கோயிலை சுற்றியுள்ள இந்து நாடார் குடும்பத்தினர் பலரும் சேர்ந்து பத்ரகாளி அம்மனுக்கு கைங்காhpயங்களை செய்தனர். கூட்டங் குழிவிளையில் அமையப் பெற்றதால் ‘கூட்டங்குழிவிளை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில்’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பூவரசமரத்தில் பொந்தில் முளைத்த ஆலமரம் வளர்ந்து பெரிதாகவே பூவரச மரம் பட்டுப்போனது. ஆலமரத்தின் கொம்புகளில் இருந்து ஏராளமான விழுதுகள் மண்ணில் ஊன்றிப் பிடித்து ஒரு ஆலமரத்தைச் சுற்றி பல ஆலமரங்கள் போல் காட்சியளித்தது. இதுப் பார்ப்பவர்களுக்கு பல ஆலமரங்கள் கூட்டமாய் நிற்பது போல் தோன்றியது. கூட்டமான ஆலமரங்களின் மூட்டில் கோயில் இருந்ததால் ‘கூட்டாலுமூடு கோயில்’ எனும் நாமம் பெற்றது. கூட்டங்குழி விளையின் வடக்குப் பகுதியாக இருந்த இடத்திற்கு கூட்டாலுமூடு என்ற பெயர் வந்தது.

பிற்காலத்தில் தேவபிரசன்னத்தின் போது மக்களால் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் என்று அன்புடன் வழிபாடு செய்யப்பட்ட அம்மன் சாந்தரூபிணியாய் விளங்கும் ஸ்ரீ பத்ரேஸ்வரி என தொpய வந்ததும் “கூட்டங்குழி விளை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில்” கூட்டாலுமூடு அருள்மிகு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில், கூட்டாலுமூடு அருள்மிகு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில்” என மாற்றம் செய்யப்பெற்றது.

அதிசயங்கள் புரியும் அம்மா*

காலரா நோயிலிருந்து மீட்டவர்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தெற்குப் பகுதி முழுவதும் ‘காலரா’ எனும் கொடிய நோய் பரவியது. கூட்டாலுமூடு மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டன. ஊரே சோகத்தில் மூழ்கி இருந்த நேரத்தில் 8 குழந்தைகள் பெற்ற பெண்மணியின் 7 குழந்தைகள் மற்றும் கணவனும் இறந்தனர். இறுதியாக இருந்த ஒரே மகனும் காலரா நோயால் பிடிக்கப்பட்டான். அவனும் இறந்து விடுவான் என்ற நிலையில் அத்தாய் கண்ணீருடன் அம்மன் பீடத்தின் முன் கிடத்தி இரவென்றும் பாராமல் அழுது வேண்டினான். பீடத்தில் சிறுவிளக்கு மட்டுமே எhpந்து கொண்டிருந்தது. முடியில் குழந்தையுடன் உட்கார்ந்திருந்த தாய் அசதியில் கண்ணயர்ந்தாள். அப்போது அவர் ஓர் கனாக்கண்டாள். ஒரு பெண்மணி கனவில் தோன்றி, வலது கையால் குழந்தையைத் தடவி, ‘நோயிலிருந்து உன் மகன் குணமடைந்து விட்டான்’ எனக் கூறினாள். தாய் விழித்தெழுந்த போது குழந்தை அமைதியுடன் இருந்தது கண்டு திடுக்கிட்டாள். இறந்து விட்டதோ என எண்ணி, மாறhக அக்குழந்தை அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தது. மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த அந்தத் தாய் வாழைக் குலையொன்றை காணிக்கை வைப்பதாய் வேண்டிக் கொண்டாள்.

அன்று முதல் இந்நிகழ்வை நினைவூட்ட அம்மன் சன்னதியில் ஆயிரமாயிரம் வாழைக்குலைக்கு பக்தர்கள் காணிக்கைச் செலுத்துகின்றனர்.

வேண்டுகோள் ஏற்றதாய்

பல வருடங்களுக்கு முன், ஒரு வருடம் மழைக் பெய்து வறட்சி நீடித்தது. அவதிபட்ட மக்கள் அம்மனிடம் திருவிழா திருக்கொடியேற்று நிகழ்ச்சி முடிந்தபின் மழைக்காக முறையிட்டனர். அன்று இரவு கோயில் சாந்திக்காரருக்கு (பூஜாரி) கனவில் அம்மன் தோன்றி, ‘நவதானிய கலசங்களுடன் நான் கடலில் நீராட (ஆறாட்டுக்கு) செல்ல வேண்டும்’ என்று கட்டளையிட்டார்.

மறுநாள் பூஜாரி கோயில் நிர்வாகிகளிடம் அம்மன் கட்டளையை நிறைவேற்றக் கேட்டுக் கொண்டார். நிர்வாகத்தின் சாந்திக்காரர் அறிவுரைப்படி 9 சிறு மண்கலன்கள் வாங்கி அதில் மண்நிரப்பு அவரிடம் கொடுத்தனர். அவரும் நவதானிய விதைகளை கலசங்களில் போட்டு தண்ணீர் விட்டு அம்மன் காலடியில் வைத்தார். பங்குனித் திருவிழாவின் ஒன்பதாவது நாளன்று மாலை 5 மணியளவில் மேளதாளத்துடன் அன்னை சப்ரத்தில் எbழுந்தருளி தேங்காப்பட்டணம் கடலில் நீராட சென்றார். அம்மன் முன் 9 கலசங்களும் வைக்கப்பட்டிருந்தனர். நவதானியங்கள் முளைத்திருந்தன. அம்மனின் வெள்ளி முகத்தை சப்ரத்தில் இருந்து கையில் எடுத்து கடல் நீரில் மூழ்கி குளிப்பாட்டினார். பூஜாரி பின் அம்மனின் வெள்ளி முகத்தை சப்ரத்தில் வைத்து பூஜை செய்யவே கடல் அலை கலசங்களை உள் வாங்கியதுக்குடன் வானில் வட்டமிட்டது.

என்ன அதிசயம்* சப்ரம் (பல்லக்கு) கடற்கரையைத் தாண்டிய சில நேரங்களுக்குள் பெரிய இடிமின்னலுடன் கூடிய மழைப் பெய்தது. அம்மனின் கருணைக்கு அளவேது* ஊரே வறட்சி நீங்கி சுவிட்சமடைந்தது. இன்றும் அம்மன் ஆறாட்டு நடந்து வருகிறது.

சிறுவனை மீட்டத்தாய்

பல வருடங்களுக்கு முன்னர் பக்கத்து ஊரில் இருந்து திருவிழா பார்க்கச் சென்ற ஒரு குடும்பத்துடன் அவர்களது அண்டை வீட்டு சிறுவனும் உடன் சென்றார். நாடகம் பார்க்கும் வேளையில் சிறுவன் தூங்கி விட்டான். நாடகம் முடிந்ததும் அவர்களும் வீட்டுக்குப் புறப்பட்டனர். சற்று நேரத்தில் சிறுவனின் தாய் குழந்தையை எங்கே என வினவ அவர்கள் தடுமாறினர். அழுதுப் புலம்பியபடியே அவர்கள் அனைவரும் அன்னையிடமே வந்து சரணடைந்தனர். சந்று நேரத்திற்கெல்லாம் ஏதோ ஓர் பாட்டி தன்னைக் கூட்டி வந்து விட்டதாகக் கூறி அச்சிறுவனும் சன்னதி வந்துச் சேர்ந்தான். மக்கள் அனைவரும் அன்னைக்கு நன்றி கூறினர். அன்று இரவு அச்சிறுவனின் தாய்க்கு கனவில் பத்ரேஸ்வரி அன்னை பால் அபிசேகம் நடப்பதாய் கனவு உணர்தினாள்.

இன்றும் பல்வேறு பக்தர்கள் 41 நாள் விரதமிகு அன்னைக்கு பாலபிசேகம் செய்து நேர்த்திகடன் முடிக்கின்றனர்.

கோயில் அமைப்பு

மூல/ முதன்மை தேவதை அருள்மிகு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன்
முரிவார தேவதைகள் அருள்மிகு கணபதி
அருள்மிகு ஐயப்பன்
அருள்மிகு பாலமுருகள்
அருள்மிகு கிருஷ்ணசுவாமி
அருள்மிகு தூர்கா தேவி
அருள்மிகு இசக்கி அம்மன்
அருள்மிகு நாகராஜர்
அருள்மிகு நவக்கிரகங்கள்
ஏவலர்கள் (பீடங்கள்) சிவயோகி
வேதாளம்
ஈசுவரகால பூதத்தான்
மேற்கூறிய முறைமைப்படி கோயில்களும், பீடஙகளும் தேவதைகளுக்கு அமைக்கப்பட்டுள்ளன.

1) ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் (மூல , முதன்மை தேவதை)

முதன்மை தேவதையாம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மனுக்கு கிழக்குத் தரிசனமாக பெரியதாய் ஆலயம் அமைந்துள்ளது. அம்மன் சாந்த சொரூபிணியாய், வலது காலை இடது பக்கமாக மடக்கி, இடது காலை பத்மாசுரன் மீது வைத்து அமர்ந்து நிலையில் எட்டு கைககளுடன் வீற்றிருக்கிறாள். எட்டுக் கைகளிலும் உடுக்கு, நாகம், திhpசு{லம், சிறிய கத்தி வாள், குங்குமத்தட்டு, கொடுவாள் (அங்குசம்) கேடயம், தீச்சட்டி ஆகியவை விளங்குகின்றன. பொதுவாக அம்மன் மேல் நோக்கியபடியே திரிசூலம் ஏந்தியிருப்பாள். இங்கே அம்மன் கையில் இருக்கும் திரிசூலம் கீழ் நோக்கியே இருக்கின்றது. இது ‘தவறுக் செய்பவர் தண்டிக்கப்படுவர்’ என்பதை உணர்த்தவே இக்கோலம் ஆகும். அம்பாள் நகைகள் அணிந்தும், குங்குமப் பொட்டுடனும் ஐஸ்வர்ய தேவதையாய் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.

2) அருள்மிகு கணபதி கோயில்

இக்கோயில் தேவஸ்தானத்தின் தென்மேற்கு கன்னிமூலையில் இருக்கிறது. இந்த கோயிலினுள் கருங்கல்லிலான கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ‘மகா கணபதி’ என்ற நாமத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

3) அருள்மிகு ஐயப்பன் கோயில்

இக்கோயில் கணபதி கோயிலுக்கு வடக்கே கிழக்குத் தரிசனமாக அமைந்துள்ளது. ஐயப்பன் சிலை கருங்கல்லால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தவக்கோலமாய் சின்முத்திரை காட்சி சாந்தரூபாய் அருள் பாலிக்கிறார்.

4) அருள்மிகு பால முருகன் கோயில்

இக்கோயில் ஐயப்பன் சன்னிதிக்கு வடக்கே கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. கருங்கல்லில் செய்யப்பட்ட பாலமுருகன் சிலை நின்ற கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாலமுருகன் வேல்தா கருணையுடன் அருள்பாலிக்கிறார்.

5) அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்

இச்சன்னதி முருகன் சன்னதிக்கு வடக்கே கிழக்கு நோக்கி காணப்படுகின்றது. கருங்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணன் புல்லாங்குழலுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

6) அருள்மிகு துர்கா தேவி கோயில்

இக்கோயில் பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக் கிழக்கே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கருங்கல்லினால் செதுக்கப்பட்ட துர்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

7) அருள்மிகு இசக்கி அம்மன் கோயில்

இக்கோயில் பத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு வடக்கே கிழக்கு தரிசனமாக அமைக்கப்பட்டுள்ளது. இசக்கி அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

மேலும் முறையே கோயிலின் (பத்ரேஸ்வரி) வடகிழக்கு நாகராஜர் ஆலயமும், பத்ரேஸ்வரி அம்மன் சன்னதிக்கு கிழக்கே நவக்கிரக தேவதைகளான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,ராகு, கேது, சனி – பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

9 கோயில்களைத் தவிர 3 பீடங்களும் உள்ளன. சுவயோகி (சோதிடருக்கு), வேதாளம், ஈசுவரகால பூதத்தானுக்கும் முறையே பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக்கு, தென்கிழக்கே, வடகிழக்கு, வடக்குப் பகுதிகளில் பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.